தகவல்கள்
இந்த பகுதியில் தமிழ்முரசத்தில் விளம்பரம், அறிவித்தல், வாழ்த்து செய்திகள், துயர்பகிவு செய்தி
போன்றவற்றினை இணைக்கவிரும்பின், அவற்றுக்கான விதிமுறைகளும் மற்றும் கட்டண விபரங்கள்
போன்றவற்றினை அறிந்துகொள்ளலாம்.
அறிவித்தல்கள்:
வானொலியில் ஒலிபரப்பாகும் அனைத்து அறிவித்தல்களும் (துயர் பகிர்வு அறிவித்தல் தவிர) குறைந்தபட்சம்
ஒலிபரப்பு நடைபெறும் நாட்களுக்கு 24 மணிநேரத்திற்கு முன்னர் தொலைபேசி ஊடாகவோ அன்றேல்
எழுத்துவாயிலாகவோ கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். இறுதி நேரத்தில் வரும் அறிவித்தல்கள்
எமது அடுத்த ஒலிபரப்புக்களிலேயே சேர்த்துக்கொள்ளப்படும். எந்த அறிவித்தல்களாக இருப்பினும்
அதன் உள்ளடக்கத்தையும், ஒலிபரப்பும் நேரத்தையும் வானொலிக்குழுவே தீர்மானிக்கும்.
பிறந்தநாள் தவிர்ந்த, வீடு விற்பனை மற்றும் வீடு வாடகை போன்ற பொதுவான அறிவித்தல்கள்,
அடுத்தடுத்து வரும் மூன்று ஒலிபரப்புக்களில் சேர்த்துக்கொள்ளப்படும்.
அறிவித்தல்களுக்கான காலமும் நேரமும் கவனத்தில் கொள்ளப்பட்டு
தேவையேற்படின் மாற்றம் செய்யும் அதிகாரம் வானொலி குழுவிற்கு உள்ளது.
நோர்வேயில் இடம்பெறும் மரண அறிவித்தல்களுக்கு கட்டணம் எதுவும் பெறப்படமாட்டாது.
கட்டணம்:
ஒருவாரத்திற்கு (மூன்று ஒலிபரப்புக்கள்) Kr. 300,-
ஒரு மாதத்திற்கு Kr. 1 000,-