அறிவிப்புகள்

தமிழ் முரசம் .

பொங்கும் தமிழை பொலிவுறச் செய்வோம் எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்

இந்த வாக்கினை நோக்காகக் கொண்டு நோர்வே வாழ் தமிழர்களின் குரலாய், தமிழின் குரலாய் எமது பணியாளர்களின் அயராத உழைப்பாலும், நேயர்களினதும், தாயகத்திலுள்ள எமது உறவுகளின் ஒத்துழைப்போடும் கடந்த 16 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது தமிழ் முரசம். எமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் காற்றலையில் எமது கடமை தொடர்கிறது. தமிழ் முரசம் என்றும் அறிவூட்டல், தெரிவித்தல், மகிழ்வித்தல் என்ற வானொலியின் அடிப்படை அம்சங்களோடு ஒலித்துவருகிறது..

எமது ஒலிபரப்புகளை பண்பலைவரிசை (fm) 99.3 மற்றும் டிஜிட்டல் ஆடியோ ஒலிபரப்பு (DAB) ஊடாக நேரடியாகவும், எமது இணையதளத்தின் ஊடாக நேரடியாகவும் மற்றும் பதிவான ஒலிபரப்பாகவும் கேட்டு மகிழலாம்.

அத்துடன் Android'ஐ இயங்குதளமாகக் கொண்ட கைத்தொலைபேசிகள் மூலம் Google Market’ல் தமிழ்முரசம் என்ற தேடுதல்மூலம் தமிழ்முரசம் Apps’ஐ பதிவிறக்கம் செய்து அதன் மூலமும் நீங்கள் எமது ஒலிபரப்புகளை நேரடியாக கேட்டு மகிழலாம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

முகநூல்   You Tube

தொடர்பு கொள்ள

தபால் முகவரி: Postboks 69 Kalbakken, 0901 Oslo, Norway

தொலைபேசி எண் : 22 87 00 00

மின் அஞ்சல் : Tamilmurasam@gmail.com

தமிழ் முரசம் - உங்கள் முரசம்